முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கியின் பிதற்றல்.. கமலை சரமாரியாக சாடிய எச் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம்!-

  சென்னை: நடிகர் கமல்ஹாசனை முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கி என எச் ராஜா விமர்சித்துள்ளார்.

  மத்திய மாநில அரசுகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இந்து தீவிரவாதம் என கமல் பேசியதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  கமலின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து அமைப்புகளும் கமலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளன.

  கமல் பேச்சு

  கமல் பேச்சு

  இந்நிலையில் நேற்று சென்னை கேளம்பாக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது இயக்கத்தில் உள்ள இயக்குநர்களுக்கு தான் நான் பயப்பட உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு அல்ல என்றார்.

  முதுகெலும்பில்லா தொடை நடுங்கி

  இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது கமலின் பேச்சு முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கியின் பிதற்றல் அவ்வளவுதான் என அவர் கூறியுள்ளார்.

  கோழைத்தனத்தை தோலுரித்து..

  கமலின் கோழைத்தனத்தை பிஜே தோலுரித்துக் காட்டிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு ஏரியைக் காணவில்லை என்றும் அதனை தனது ரசிகர்களை தேடச்சசொல்லப் போவதாகவும் கமல் கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

  பாவம் மக்கள்..

  பாவம் மக்கள்..

  மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீது தான் உள்ளது என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார். பாவம் மக்கள் என்றும் எச் ராஜா கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  H Raja slams Actor Kamal for his speech witrh his fans in Chennai. He said Kamal is a spineless ditherer.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற