தமிழிசை கிண்டலுக்கு கமல் கட்சி செம விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமல் கட்சியில் சேர தமிழிசைக்கு மெயில்...டென்ஷன் ஆனா தமிழிசை- வீடியோ

  சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அக்கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மெயில் வரும் என்றும் மக்கள் நீதி மய்யம் தெளிவுபடுத்தியுள்ளது.

  நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

  எனக்கொரு மெயில் வந்திருக்கு

  எனக்கொரு மெயில் வந்திருக்கு

  தமிழகத்தில் மிஸ்ட் கால் கொடுத்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள் பாஜகவினர். இந்த வரலாறு ஊரறியும். இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மெயில் வருவதாக கூறி சிரித்தார்.

  கட்சியில் உறுப்பினர் ஆயிட்டேனா?

  கட்சியில் உறுப்பினர் ஆயிட்டேனா?

  மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள். அந்த இமெயிலில் நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இமெயில் எப்படி கிடைத்தது

  இமெயில் எப்படி கிடைத்தது

  என் மெயில் ஐடி எப்படி இவர்களுக்குக் கிடைத்தது. உறுப்பினர்களை சேர்க்க, கிடைக்கும் இமெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார் என்று கிண்டடித்துக்கொண்டே பேசினார். தனக்கு வந்த மெயிலையும் காண்பித்தார்.

  பதிவு செய்தால் மெயில் வரும்

  பதிவு செய்தால் மெயில் வரும்

  தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள மக்கள் நீதி மய்யம், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை என்றும், இணையதள பக்கத்தில் பதிவிட்டால் மட்டுமே அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சொல்வதைப் பார்த்தால் தமிழிசை பதிவு செய்திருப்பாரோ?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Hasan's MNM has clarified on TN BJP president Tamilisai's complaint on the party membership.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற