For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத யாத்திரைக்கு அனுமதியளித்த விவகாரம்.. யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.. கமல் தாக்கு

தமிழக அரசு ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Kamal tweeted about Ratha yathra

இந்நிலையில் இன்று தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் கோட்ட வாசல் வழியாக ரத யாத்திரை தமிழகம் வந்தது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதில் சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி.

மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

English summary
Makkal Needhi maiam leader Kamal has tweeted about Ratha yathra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X