ஒரே "டிவீட்"டில் விஸ்வரூபமெடுத்த கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தான் அரசியலுக்கு வந்து விட்டதாகக் கூறி அரசியல் உலகில் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் பொதுவாழ்வில் என்ன செய்திருக்கிறார், மக்களுக்காக என்ன செய்திருக்கிறார். அவருக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என்று பாஜகவினரும், அதிமுக அமைச்சர்களும் ஏன் முதலமைச்சரும் கூட கமல் குறித்து விமர்சனங்களை சரமாரியாமுன் வைத்தனர்.

அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் கரை படிந்திருக்கிறது என்று கமல்ஹாசன் சொன்னபோது, தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்துவிட்டு பேசட்டும் என்று சவால் விட்டார் அமைச்சர் ஜெயக்குமார். இதே போன்று முதுகெலும்பில்லாதவர் கமல் என்று வசை பாடினார் எச். ராஜா.

 ஆதாரத்தை அனுப்புங்கள் மக்களே

ஆதாரத்தை அனுப்புங்கள் மக்களே

இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக தனது இன்றைய அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார். நேற்றைய டுவிட்டர் பதிவில் முடிவெடுத்தால் முதல்வர் என்று கூறியிருந்த கமல், இன்று ஊழல் குறித்து ஆதாரம் கேட்கும் அமைச்சர்களுக்கு மக்களே ஆதாரங்களை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.

 டிஜிட்டல்ல அனுப்புங்க

டிஜிட்டல்ல அனுப்புங்க

ஊழல் இருக்குன்னா நீங்களே எழுதி அனுப்பிடுங்க கார்டு, கவர்ல, கடுதாசிக வேணாம். கிழிச்சிப் போட்டுவாங்க டிஜிட்டல் யுகம் இது, அதனால டிஜிட்டல்ல பதிவு செய்யுங்க என்று ரசிகர்களை மட்டுமல்ல எல்லா வாக்காளர்களையும் கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

 இதிலும் தனி ஸ்டைல்

இதிலும் தனி ஸ்டைல்

தனது திரைப்படங்களிலும் வசனங்களிலும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகளை கையாள்வதே கமலின் ஸ்டைல். அப்படியேத் தான் தனது அரசியல் பயணத்திலும் அவர் தனி ரூட் எடுத்திருக்கிறார்.

 அரசியலில் விஸ்வரூபம்

அரசியலில் விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்திற்கு தடை வந்த போது அவர் படத்தின் பாடலே கமல்ஹாசனுக்கு கெத்து கூட்டியது. அந்தப் பாடல் இப்போதைய அரசியல் அறைகூவலுக்கும் உதாரணமாய் எடுத்துக் கொள்ளலாம். யாரென்று தெரிகிறதா, இவன் யாரென்று புரிகிறதா, தடைகளை வென்றே சரித்திரம் படைப்பேன் என்று நிஜ வாழ்விலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamalhassan's Vishwaroopam in politics
Please Wait while comments are loading...