பள்ளி மாணவர்கள் கையில் சாதிக்கயிறுகள்! அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த காமராஜர் பேத்தி!
நெல்லை: பள்ளி மாணவர்கள் கையில் வண்ணங்களிலான சாதிக்கயிறுகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு காமராஜர் பேத்தி கமலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்குநேரியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய அவர் இது போன்ற ஒரு சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் தொடரக்கூடாது என்ற அக்கறையில் இந்தக் கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். சாதி என்பதே இருக்கக் கூடாது என்பது தான் தனது தனிபட்ட கருத்து என்றும் கூறினார்.

பள்ளி மாணவர்கள் கையில் அவரவர் சாதியை அடையாளம் கூறும் விதமாக பல வண்ணங்களில் கயிறுகள் கட்டி வருகிறார்கள் என்றும் இதனை கவனத்துடன் கையாண்டு சாதிக்கயிறுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சாதிக்கயிறுகள் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக காமராஜர் பேத்தி கமலி தெரிவித்துள்ளார். கமலி காமராஜ தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருப்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை மக்களவைத் தொகுதியை கமலிகா காமராஜ் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நெல்லையை மையமாக வைத்து அரசியல் பணிகளில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
நாங்குநேரியில் அரிவாள் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை என்ற மாணவனையும் அவரது சகோதரியையும் நேரில் சென்று பார்த்த பின்னர் சாதிக்கயிறு குறித்த பேட்டி கொடுத்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications