தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு... பீதியில் எம்எல்ஏக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எடப்பாடி அணியினர் இணைப்பு நிகழ்ச்சியில் பேசியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

அந்தக் கடிதத்தில் தங்களுக்கு முதல்வர் மீதான நம்பிக்கை போய் விட்டது. எனவே அவருக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்றனர்.

புதுவையில் ரிசார்ட்

புதுவையில் ரிசார்ட்

இதைத் தொடர்ந்து அந்த 19 பேரும் புதுவையில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொறடாவின் அனுமதி பெறாமல் ஆளுநரை சந்தித்தது குறித்து அந்த 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

பதில் அளிக்கவில்லை

பதில் அளிக்கவில்லை

இதற்கு கால அவகாசம் வழங்கியும் இதுவரை பதிலளிக்க வில்லை. இதற்கிடையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் அங்கிருந்து தப்பி எடப்பாடி அணிக்கு தாவினார். இதற்கு எடப்பாடி அணியினரின் குதிரை பேரம்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய தினகரன், 18 எம்எல்ஏக்களையும் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளார்.

விடுதியில் ரெய்டு

விடுதியில் ரெய்டு

எம்எல்ஏக்கள் விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனரா? அல்லது தினகரனால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா? என்பதை அறிய கடந்த 12-ஆம் தேதி தமிழக போலீஸார் அந்த விடுதியில் சோதனை நடத்தி எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளதாக போலீஸிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கோரிக்கை

பாதுகாப்பு கோரிக்கை

இந்நிலையில் தங்களுக்கு எடப்பாடி தரப்பினரால் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 18 எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதிக்கு இதுபோன்ற பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka police refused to give protection for Dinakaran faction MLAs who are staying in Coorg resort.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற