கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தது முதல் தற்போது வரை - புதிய வீடியோ வெளியீடு
கருணாநிதி ஓராண்டு கழித்து அண்ணா அறிவாலயம் வந்தது முதல் தற்போதைய நிகழ்வு வரை ஒரு வீடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: கருணாநிதி ஓராண்டு கழித்து அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது முதல் தற்போதைய நிகழ்வுகள் வரை ஒரு வீடியோ தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கருணாநிதிக்கு உடல்நல குறைவால் அவரால் எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அவரது உயிரினும் மேலான முரசொலி இதழின் பவள விழாவில் கூட கருணாநிதி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றது முதல் தற்போது வரை நிகழ்வுகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
கருணாநிதிக்கு பிடித்த இடம்
கருணாநிதி தனது வீட்டை காட்டிலும் அதிக நேரம் செலவிட்டது அண்ணா அறிவாலயத்திலும் முரசொலி அலுவலகத்திலும்தான். அப்படிப்பட்ட இடங்களுக்கு முன்பு போல் கருணாநிதியால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் தற்போது முன்னேறி வரும் நிலையில் அவர் முதன் முதலாக கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார்.

கிரிக்கெட்
பின்னர் கருணாநிதி டிவியில் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். மிகவும் உற்சாகமாக அவர் பார்த்து ரசித்தார். ஸ்டாலின் பேசிய பொதுக் கூட்ட வீடியோவை தனது செல்போனில் இருந்து காண்பிக்க அதை சிரித்தபடியே கருணாநிதி பார்த்தார்.

முரசொலி பத்திரிகை
முரசொலி பத்திரிகையில் ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் குறித்த செய்திகளை அவர் காண்பிக்க கருணாநிதி அதை படித்தார். முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் அழைப்பிதழும் அவரிடம் காண்பிக்கப்பட்டது.

கைகளில் முத்தமிட்ட மூதாட்டி
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாள் என்பவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதை அறிந்த ஸ்டாலின் அவரை கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அப்போது கருணாநிதியை பார்த்த உணர்ச்சி மிகுதியால் அவர் தேம்பி அழ ஆரம்பித்தார். பின்னர் கருணாநிதியின் கைகளில் முத்தமிட்டார்.

தொண்டர்களை சந்தித்த கருணாநிதி
சென்னைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து அவரை வழியனுப்ப கருணாநிதி வாசல் வரை அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த தொண்டர்களுக்கு கருணாநிதி கையசைத்தார்.

கருணாநிதி வருகை
இதையடுத்து மார்ச் 18-ஆம் தேதி மீண்டும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார் கருணாநிதி. அப்போது வருகை பதிவேட்டில் மு.க என்று கையெழுத்திட்டார். முரசொலி கண்காட்சியையும் அவர் ரசித்தார். இதுபோல் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது, பேத்தி பாடிய பாட்டை கேட்பது என கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications