கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர்சத்து குறைபாடுக்கு சிகிச்சை: மருத்துவமனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் யாரையும் சந்திக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

Karunanidhi is being treated for dehydration: Hospital

இந்நிலையில் உடல்நலக் குறைவால் அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாதியின் உடல்நலம் குறித்து காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Karunanidhi is being treated for dehydration: Hospital

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cauvery hospital administration said in a statement that DMK supremo Karunanidhi is doing good and he has to stay there for few more days.
Please Wait while comments are loading...