For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெப்படி இருக்கு... கருணாநிதிக்கு ஓட்டுரிமை இல்லை; ஜெ.வுக்கு மட்டும் இருக்கு..!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்த் திரை உலகத்தின் மிக மூத்த படைப்பாளியான தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை முன்வைத்து கடந்த சில மாதங்களாக திரை உலகில் ஏக களேபரங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இவங்க எல்லாம் உறுப்பினராம்..

இவங்க எல்லாம் உறுப்பினராம்..

இந்த வாக்காளர் பட்டியலில் நடிகை ராதிகாவின் மகன் ரேயான், ராதாரவி மகன் ஹரி என ஏகப்பட்ட பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியினரும் நடிகர் சங்க உறுப்பினர்களாம்.

கருணாநிதிக்கு வாக்குரிமை இல்லை..

கருணாநிதிக்கு வாக்குரிமை இல்லை..

ஆனால் தமிழ்த் திரைஉலகையே பராசக்திக்கு முன்பு பராசக்திக்கு பின்பு என மடைமாற்றியவர்; வசனகர்த்தா, பாடலாசிரியர் என திரை உலகில் கொடி கட்டிப் பறந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வாக்களிக்கும் உரிமை இல்லையாம்.

தொழில்முறையற்ற ஆயுட்கால உறுப்பினராம்

தொழில்முறையற்ற ஆயுட்கால உறுப்பினராம்

அதாவது கருணாநிதி, நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்தான்.. ஆனால் தொழில்முறையற்ற ஆயுட்கால உறுப்பினர் என்ற பட்டியலுக்குள் மாற்றப்பட்டுள்ளாராம். அதனால் அவரால் வாக்களிக்க முடியாதாம். இத்தனைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி. கடந்த ஆண்டு கூட வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுட்கால உறுப்பினராக இருந்தார்.

ஜெயலலிதாவுக்கு உண்டு..

ஜெயலலிதாவுக்கு உண்டு..

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, வாக்களிக்கும் உரிமை பெற்ற ஆயுட்கால உறுப்பினராக இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் கடந்த முறை 28வது இடத்தில் அவர் பெயர் இருந்தது. தற்போது 38வது இடத்துக்கு ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மூத்த ஆயுட்கால உறுப்பினர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெறுவதற்கு பதிலாக பின்னால் நகர்த்தப்பட்டிருப்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

பின் தள்ளப்பட்ட கமல்

பின் தள்ளப்பட்ட கமல்

நடிகர் கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் 70வது இடத்தில் இருந்தது. தற்போது 80வது இடத்துக்கு மாறியிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சரத்குமாருக்கு தடை

சரத்குமாருக்கு தடை

இதனிடையே தென்காசி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் சரத்குமார், சங்க விதிகளின்படி தேர்தலில் போட்டியிட முடியாது; ஆகையால் சரத்குமார் களமிறங்கினால் நீதிமன்றத்துக்கு போக நடிகர் விஷால் தலைமையிலான டீம் 'ரெடி'யாக காத்திருக்கிறதாகவும் கூறப்படுகிறது.

English summary
DMK leader Karunanidhi had lost his voting power in Nadigar Sangam elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X