குளித்தலை டூ திருவாரூர்... அஸ்தமனமே இல்லாத உதயசூரியனாக வலம் வரும் கருணாநிதி!
சென்னை: மீண்டும் ஒரு தேர்தல் போர்க்களத்தில் குதித்துள்ளார் 92 வயதான திமுக தலைவர் கருணாநிதி. இந்த வயதிலும் சுறுசுறுப்பான தேர்தல் பிரசாரக் களத்திலும் அவர் குதிக்கப் போகிறார் என்பது இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம்.
முதல் தேர்தலிலிருந்து இதுவரை போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்பது வரலாறு. எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத பெருமையும் கூட இது.
தோல்வியே காணாத தனிப்பெரும் தலைவராக வலம் கருணாநிதியின் தேர்தல் வரலாறு இதோ...

முதல் தேர்தல் குளித்தலை
1957ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றார்.

1962ல் தஞ்சாவூர்
1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வீழ்ந்தவர் காங்கிரஸின் பரிசுத்த நாடார்.

சென்னைக்கு இடமாற்றம்
முதல் இரு தேர்தல்களை சென்னைக்கு வெளியே சந்தித்த அவர் 3வது தேர்தல் முதல் சென்னைக்கு மாறினார். 1967ல் நடந்த தேர்தலில் சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸின் எஸ்.ஜி. விநாயகமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

1971ல் சைதாப்பேட்டை
1971ல் மீண்டும் அதே சைதாப்பேட்டையில் போட்டியிட்டு காங்கிரஸின் ராமலிங்கத்தை வென்றார் கருணாநிதி.

1977ல் அண்ணா நகர்
1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா நகர் தொகுதிக்கு மாறிய கருணாநிதி அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தியை தோற்கடித்தார்.

1980ல் மீண்டும் அண்ணா நகர்
1980ம் ஆண்டு மீண்டும் அண்ணா நகரில் நின்ற கருணாநிதி அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எச்.வி. ஹண்டேவை வீழ்த்தினார்.

துறைமுகம்
1989ம் ஆண்டு துறைமுகம் தொகுதிக்கு மாறி வந்த கருணாநிதி அத்தேர்தலில் முஸ்லம் லீக்கின் வஹாப்பைத் தோற்கடித்தார்.

1991ல் மீண்டும் துறைமுகம்
1991ம் ஆண்டு மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி அதிமுக வேட்பாளர் கே.சுப்புவை வீழ்த்தினார்.

சேப்பாக்கத்தில் 3 முறை
1996 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதிக்கு மாறினார் கருணாநிதி. அத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நெல்லை கண்ணனை வீழ்த்தி வென்றார்.

2001ல்
2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸின் தாமோதரனை தோற்கடித்து வென்றார்.

2006ல்
2006ம் ஆண்டு அதே சேப்பாக்கத்தில் சுயேச்சையாக நின்ற தாவூத் மியா கானை தோற்கடித்து சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று அசத்தினார்.

2011ல் திருவாரூர்
2011ம் ஆண்டு தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு இடம் பெயர்ந்தார் கருணாநிதி. அதில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2016ல் மீண்டும் திருவாரூர்
தற்போது 2016 சட்டசபைத் தேர்தலிலும் திருவாரூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார் கருணாநிதி என்பதால் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. மேலும் இதுவரை தோல்வி என்றால் என்ன என்றே தெரியாத தலைவராக வலம் வரும் கருணாநிதிக்கு இந்த முறையும் திருவாரூர் மக்கள் அமோக வரவேற்பை அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications