For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குமூலம் திருத்தம்- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்- கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi for thorough probe into Rajiv Gandhi assassination
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வாக்குமூலம் திருத்தப்பட்டதாக விசாரணை அதிகாரியே ஒப்புதல் தெரிவித்திருப்பதால் பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜிவ் கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK chief M. Karunanidhi on Sunday wanted a thorough inquiry into the Rajiv Gandhi assassination in the light of the revelation made by former CBI official V. Thiagarajan that he had failed to record verbatim the confessional statement of A.G. Perarivalan alias Arivu, one of the convicts facing death penalty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X