For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம்: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் அதே வழியில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். விரைவில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

கேள்வி: மோடியை எதிர்த்து அத்வானி போர்க்கொடி தூக்கினார். இருப்பினும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இது நாடகமாகத் தோன்றவில்லையா?

பதில்: அவர்களுடைய உள்கட்சி விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை.

Karunanidhi welcomes Centre's affidavit on Sethu project in SC

கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் அதே வழியில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறித்து...

பதில்: வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.

கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் திமுகவின் வியூகம் என்ன?

பதில்: தேர்தலுக்கான திமுகவின் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும்.

கேள்வி: இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழாவுக்கு தங்களுக்கு அழைப்பு வராதது குறித்து...

பதில்: நான் யார்... அவர்கள் என்னை அழைப்பதற்கு?

கேள்வி: பத்து ரூபாய் குடிநீர் பாட்டில் குறித்து...

பதில்: பதில் கூற விரும்பவில்லை.

English summary
DMK chief M Karunanidhi on Monday welcomed the Centre's affidavit in the Supreme Court that it would go ahead with the Sethusamudram Shipping Channel project and hoped for a good verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X