For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2011ல் வரலாறு படைத்த திருவாரூரில் 2வது முறையாக களமிறங்கும் கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி 2வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். மேலும் இது அவருக்கு 14வது சட்டசபைத் தேர்தலாகும்.

திமுக தலைவர் கருணாநிதி 14வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்த முறையும் அவர் கடந்த முறை போட்டியிட்ட திருவாரூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.

தனது முதல் தேர்தலை குளித்தலையில் சந்தித்த கருணாநிதி தற்போது 14வது தேர்தலை தான் பிறந்த மாவட்டமான திருவாரூரில் சந்திக்கவுள்ளார்.

Karunidhi seeks relection from Thiruvarur

இதுவரை போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதிதான். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என பல பொறுப்புகளை அவர் சட்டசபையில் வகித்துள்ளார்.

1996ம் ஆண்டுதான் தேர்தலில் அதிகபட்சமாக 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மிகவும் குறைவாக 699 வாக்குகள் வித்தியாசத்தில் 1980ம் ஆண்டு அண்ணாநகர் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஹண்டேவைத் தோற்கடித்தார்.

இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் முதல்வர் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் அவர் பெற்ற வாக்குகள் விவரம்:

1957- குளித்தலை: கருணாநிதி - 22,785 காங். வேட்பாளர் கே.ஏ.தர்மலிங்கம் - 14,489 வாக்கு வித்தியாசம் - 8,296

1962-தஞ்சாவூர் - கருணாநிதி - 32,145- காங். வேட்பாளர் பரிசுத்த நாடார் - 30,217 - வாக்கு வித்தியாசம் - 1,928

1967- சைதாப்பேட்டை - கருணாநிதி - 53,401 - காங். வேட்பாளர் விநாயகமூர்த்தி - 32,919 - வாக்கு வித்தியாசம் - 20,482

1971- சைதாப்பேட்டை - கருணாநிதி - 63,334 - காங். வேட்பாளர் குடந்தை ராமலிங்கம் - 50,823 - வாக்கு வித்தியாசம் - 12,511

1977- அண்ணாநகர் - கருணாநிதி - 43, 076 - அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி -26,638 - வாக்கு வித்தியாசம்: 16,438

1980 - அண்ணாநகர் - கருணாநிதி - 51, 290 - அதிமுக வேட்பாளர் எச்.வி.ஹண்டே - 50, 591 - வாக்கு வித்தியாசம்: 699

(1984 ம் ஆண்டு முதல் 1986 வரை மேலவை உறுப்பினராக கருணாநிதி இருந்தார்)

1989 துறைமுகம் - கருணாநிதி - 30,932 - முஸ்லீம் லீக் வேட்பாளர் வகாப் - 9,641 - அதிமுக (ஜெ.) வேட்பாளர் பட்டாபிராமன்: 8,086 - வாக்கு வித்தியாசம்: 31,991

1991 - துறைமுகம் - கருணாநிதி - 30,932 - காங்கிரஸ் வேட்பாளர் கே.சுப்பு - 30,042 - வாக்கு வித்தியாசம் - 890

1996 - சேப்பாக்கம் - கருணாநிதி - 46,097 - காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணன் - 10,313 - வாக்கு வித்தியாசம் - 35,784

2001 - சேப்பாக்கம் - கருணாநிதி 29836 - காங்கிரஸ் வேட்பாளர் 25002 - வாக்கு வித்தியாசம் - 4834

2006 சேப்பாக்கம்- கருணாநிதி - 34188- காங்கிரஸ் வேட்பாளர் தாவூத் மியா கான் - 25662 - வாக்கு வித்தியாசம் -8526

2011 - திருவாரூர் - கருணாநிதி - 109014 - அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் - 58765- வாக்கு வித்தியாசம் - 50,249

English summary
DMK president Karunidhi is seeking the relection from Thiruvarur assembly seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X