"லைக்' செஞ்சு, அன்பையும் 'ஷேர்' செய்தாளே.. இப்ப ஆளைக் காணோமே!"
சென்னை: பேஸ்புக்கில் தன்னுடன் அன்பொழுகப் பேசிய பெண்ணை பார்ப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து ஆளைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்த நபரைப் பிடித்த போலீஸார் அவருக்கு அறிவுரை கூறி ஊருக்கே அனுப்பி வைத்தனர்.
பேஸ்புக்கால் பலர் பித்துப் பிடித்து அலையும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இந்த பேஸ்புக்கால் பலர் காதல் கொள்கின்றனர், அதனால் மோதல்களும், கொலைகளும் கூட நடக்கின்றன. பணம் பறிக்கும் மோசடிகளும் நடக்கின்றன.. நாலு நல்லது நடந்தால் 40 கெட்டதும் நடக்கிறது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் என்று தெரிய வந்தது.
அவர் போலீஸாரிடம் கூறுகையில், நான் பேஸ்புக் மூலமாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டேன். அவரைப் பார்க்கவே சென்னை வந்தேன். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு போலீஸார் அறிவுரை கூறினர். எச்சரிக்கையும் விடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications