காட்பாடி அருகே இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை போலீசார் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இரிடியம் வாங்க வந்த 16 பேர் கைது

  வேலூர்: காட்பாடி பகுதியில் இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை மடக்கி பிடித்தது காவல்துறை தொடர்ந்து 6 மணி நேரம் விசாரித்து வருகிறது.

  வேலூர்மாவட்டம்,கேவிகுப்பம் பேருந்து நிலையத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தசுமார் 10-க்கும் மேற்பட்டோர் சொகுசு கார்களில் வந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்.இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கேவிகுப்பம் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

  Katpadi police arrested 16 industrialists who came to bought Iridium

  இதனையடுத்து கேவிகுப்பம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் கேவிகுப்பம் அருகேயுள்ள தேவரிஷிகுப்பத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்கப்போவதாக கூறி இவர்களை இங்கு வரவழைத்துள்ளார். இவர்களும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் அதனை வாங்க இங்கு வந்துள்ளனர்.

  சொகுசு கார்களில் வந்தவர்களை போலீஸார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதோடு அவர்களின் சொகுசு கார்களையும் சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் 0-15 பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  Katpadi police arrested 16 industrialists who came to bought Iridium

  மேலும் இரிடியத்தை சோதனை செய்யும் கருவியும் கதிர் வீச்சு தாக்காமல் இருக்க கோட்டும் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த குழுவில் காவல்துறையின் உதவி ஆணையர் மகனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேவரிஷிகுப்பத்திற்கு பாலமுருகனை தேடி சென்ற போது அவர் தப்பி தலைமறைவாகிவிட்டார்.

  தொழிலதிபர்கள் உண்மையில் எதற்காக காட்பாடி வந்தார்கள் இரிடியம் வாங்கவா அல்லது சிலைக்கடத்தல் கும்பலா என முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொத்தாக சிக்கியுள்ள இந்த கும்பலை விட்டுவிடாமல் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Katpadi Police arrested 16 persons from other states who came to buy Iridium, public suspects the mysterious of the other state persons and informed police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற