For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ப்ளீஸ் காப்பாத்துங்க".. கையில் குளுக்கோஸுடன் ஊருக்குள் வந்த நபர்.. அலறி அடித்து ஓடிய கொடை மக்கள்

கொடைக்கானலில் போலீசார் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

Google Oneindia Tamil News

கொடைக்கானல்: "ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று கையில் குளுக்கோஸ் பாட்டிலும் ஊருக்குள் சுற்றி வந்த நபரை பாரத்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு போனார்கள்..!

தமிழ்நாடு முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

மோடியுடன் முதல் ஆலோசனை கூட்டம்.. காணொலி காட்சியில் ஸ்டாலின் பங்கேற்பு.. கொரோனா பரவலை தடுக்க வியூகம் மோடியுடன் முதல் ஆலோசனை கூட்டம்.. காணொலி காட்சியில் ஸ்டாலின் பங்கேற்பு.. கொரோனா பரவலை தடுக்க வியூகம்

அதனால்தான், கொடைக்கானலில் வழக்கமாக மே மாதம் இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி இந்த முறை ரத்தாகி உள்ளது.. இதனால் மிகபெரிய பொருளாதார இழப்பில் அந்த மாவட்டம் சிக்கி உள்ளது. அத்துடன், கொரோனா தொற்றும் அதிகமாகி உள்ளது.

 இளைஞர்

இளைஞர்

இந்நிலையில், கொடைக்கானலில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அண்ணா சாலையில் இளைஞர் ஒருவர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி சுற்றி கொண்டிருந்தார்.. அந்த வழியாக நடந்து செல்வோரிடமும், பைக்கில் செல்வோரிடமும், "எனக்கு கொரோனா இருக்கு.. ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க" என்று சொன்னார்.. அதுமட்டுமல்லாமல், அந்த ரோட்டில் கடையில் உட்கார்ந்திருந்தவர்களிடமும் சொன்னார்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இளைஞர் இப்படி சொல்லியதுமே, அவருக்கு பின்னால் சில போலீசார் ஓடி வந்தனர்.. "அந்த நோயாளியை பிடிங்க.. விட்ருடாதீங்க".. என்று சத்தம் போட்டுக் கொண்டே வரவும், இதை கேட்டதும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓடினர்.. இதனால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

 சித்தரிப்பு

சித்தரிப்பு

இதையடுத்து, ஓட்டம் பிடித்த பொதுமக்களை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தன் அருகில் வருமாறு அழைத்தார்.. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றும், கொரோனா நோயாளி போன்று சித்தரிக்கப்பட்ட இளைஞரை பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.. இதற்கு பிறகுதான் பொதுமக்களுக்கு உயிரே வந்தது.

 அலட்சியம்

அலட்சியம்

கொடைக்கானலில் இப்போது தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது, ஆனாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு, நீங்கள் எல்லாம் இப்படி ரோட்டில் நடமாடினால் ஆபத்தில் முடியாதா? இதை உணர்த்தவே, இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம்... அதனால், யாரும் தேவையில்மல் வெளியே வர வேண்டாம்.. மாஸ்க் போடுங்க.. காலை 10 மணிக்கு மேல் ரோட்டில் யாரும் நடமாட கூடாது" என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

English summary
Kodaikanal Police Innovation Awareness Program on Coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X