உலகக் கோப்பையில் பங்கேற்று சாதனை படைத்த கோத்தகிரி லதான்யா.. கோவையில் பாராட்டு!
கால்பந்து போட்டியில் ரஷ்யா சென்று வந்த கோத்தகிரி மாணவிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோவை: உலக கோப்பை கால்பந்து போட்டியில், பந்தை எடுத்து கொடுப்பதற்காக தேர்வாகி ரஷ்யா சென்று வந்த கோத்தகிரியை சேர்ந்த மாணவிக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது
கோத்தகிரியை சேர்ந்த பள்ளி மாணவி லதான்யா ஜான் என்பவர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்கத்தின்போது பந்தை கால்பந்து வீரர்களுக்கு எடுத்து கொடுக்கும் நிகழ்விற்காக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். குறிப்பாக 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் இருந்து இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வாகவும் இருந்தனர்.

பல்வேறு கட்ட போட்டிகள் தடத்தப்பட்டு இந்த தேர்வு நடைபெற்றது. அதில் கோத்தகிரியை சேர்ந்த லதான்யாவும் ஒருவர். பின்னர் அவர் பிரேசில் அணி விளையாடிய போட்டியின் துவக்கத்தில் பந்தை எடுத்து கொடுத்து போட்டியை துவக்கி வைத்தார்.
இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு கெளரவத்தை ஏற்படுத்திய லதான்யாவிற்கு கோவையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த மாணவி உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக இருந்தது பெருமையளிப்பதாக லதான்யா தெரிவித்தார் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications