மீத்தேன் வேண்டாம்... விவசாயத்தைக் காப்போம் - கோவையில் முழங்கிய மாணவர்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் போராடிய மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Kovai students stage protest against Neduvasal hydrocarbon project

நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை வஉசி மைதானத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வேண்டாம் வேண்டாம் மீத்தேன் வேண்டாம் என்றும், காப்போம், காப்போம் விவசாயிகளை காப்போம் என்றும் முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
a group of students and youths staged a sit-in protest and raised slogans against the hydrocarbon projects at the VOC Park ground on Friday evening.
Please Wait while comments are loading...