For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கங்கள் சிறு நரிகளிடம் ஒரு போதும் பிச்சை கேட்காது... டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

Lions will not bargain with foxes, roars Dr Ramadoss
தர்மபுரி: பாஜகவிடமோ அல்லது தேமுதிகவிடமோ தாங்கள் ஒருபோதும் பிச்சை கேட்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக கூறியுள்ளார். இதன் மூலம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இனியும் பாஜகவிடம் தாங்கள் கெஞ்சப் போவதில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது.

டாக்டர் ராமதாஸ் அன்புமணியை அறிமுகப்படுத்தி வைத்தார். கையில் மாம்பழத்துடன் அன்புமணி அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அவர் பேசுகையில், அன்புமணி இங்கே வேட்பாளராக உங்கள் முன்பு நிற்கிறார். அவரை இந்தியாவின் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதனை தேர்தல் முடிவுகள் காட்டப்போகிறது.

சிங்கங்கள் சிறு நரிகளிடம் பிச்சை கேட்குமா? ஒருபோதும் கேட்காது. சிங்கக்குட்டிகளான நீங்கள் அதற்கு அனுமதிப்பீர்களா?. புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போன இந்த காலத்தில் இந்த தொகுதியில் ஒரு மவுனப்புரட்சி காத்திருக்கிறது.

அன்புமணி ராமதாசின் வெற்றியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களின் பங்கு அதிகமாக இருக்கபோகிறது. நான் நடத்துவது நாணயமான அரசியல், வியாபாரம் அல்ல என்றார் ராமதாஸ்.

ராமதாஸின் பேச்சால் பாஜக கூட்டணியில் பிளவு தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.

English summary
The BJP- PMK alliance is on rocks. Speaking at a campaign meet in Dharmapuri, PMK founder S. Ramadoss hinted that his outfit may be parting ways with the NDA. “A lion will not bargain with foxes,” he remarked, after introducing his son Anbumani Ramadoss as the candidate for the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X