கவுரவ கொலை அச்சம்... பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்: கவுரவ கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் உயிருக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜின் மகள் கீர்த்தனா சித்த மருத்துவம் படித்துள்ளார். இவரும் சேலத்தைச் செந்தில்குமாரும் 7 ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளனர்.

கீர்த்தனாவும் செந்தில்குமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் கீர்த்தனாவின் பெற்றோர் அந்தஸ்து காரணமாக இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 24-ந் தேதி திருமணம் செய்ததுடன் மதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
அப்போது கீர்த்தனாவின் பெற்றோர் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி கீர்த்தனாவை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே செந்தில்குமாரை கீர்த்தனாவின் குடும்பத்தினர் ஏவிய கூலிப்படையினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் கவுரவ கொலை செய்யப்பட்டுவிடுவோமோ என அஞ்சிய இருவரும் திண்டுக்கல் எஸ்.பி. சரவணனிடம் உயிருக்கு பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எஸ்.பி. சரவணனிடம் அவர்கள் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, எங்களது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு எனது பெற்றோர்தான் பொறுப்பு எனக் கூறினார்.
போலீசில் தஞ்சடைந்த கீர்த்தனா, மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேல் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications