பிப்ரவரி 12 முதல் டேங்கர் லாரி ஸ்டிரைக்... கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிப்ரவரி 12 முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. டெண்டர் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த தென்பிராந்திய எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பிப்ரவரி 12 முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது வரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டரை மாநில அளவிலான டெண்டராக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LPG tanker lorries announced indefinite strike from February 12

மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை புரியவைக்கும் விதமாக காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பால் பிப்ரவரி 12ம் தேதிக்குப் பிறகு சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
LPG tanker lorry owners announced indefinite strike from February 12 against of tender changes by central government, as the strike begins from monday onwards the shortage of gas cylinders supply may hit people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற