காரைக்குடி பள்ளியைக் கலக்கிய "அப்துல் கலாமும், நரேந்திர மோடி"யும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி இன்று (10.08.2017) நடைபெற்றது.

இபோட்டிக்கு தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியை கோமதி ஜெயம் அனைவரையும் வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்கம், சாக்கோட்டை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் அலமேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Maaruveda Potti in Karaikudi school

காரைக்குடி, முத்துப்பட்டனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி. லதா நடுவராக இருந்து மாணவர்களின் நடிப்பு மற்றும் பேச்சுத் திறனை மதிப்பீடு செய்து பணியாற்றினார்.

Maaruveda Potti in Karaikudi school

மாணவர்கள் ஔவையார், வீரபாண்டிய கட்டபொம்மன், அப்துல் கலாம், காமராஜர், தேவதை, சிவன் மற்றும் பாரதத்தாய், ஜான்சி ராணி, ராதை, கிருஷ்ணன், விவசாயி, இந்திரா காந்தி, நரேந்திரமோடி, காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற வேடங்களில் வசனங்களைப் பேசியும், நடித்தும் தன் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Maaruveda Potti in Karaikudi school

பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியை கண்டு களித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை மாணவிகள் கோமதி மற்றும் விருக்சா தொகுத்து வழங்கினார்கள். ஆசிரியர் சுனிதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் செய்திருந்தார்.

Maaruveda Potti in Karaikudi school

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Maaruveda Potti was held in Ramanathan chettiyar municipal high school in Karaikudi.
Please Wait while comments are loading...