லஸ்ஸா இல்லை "லூஸா".. பாவம் கூகுள் மேப்பே குழம்பிருச்சு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் மேப்ஸ் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. காரணம், அதன் மொழிக் குழப்பம். கூகுள் மேப்பின் மெஷின் டிரான்ஸ்லேஷன் படு காமெடியாக இருக்கிறது.

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் என்று பாட்ஷா படத்தில் ரஜினி பாட்டுப் பாடுவார். ஊர் பெயரே தெரியாத இடத்துக்குப் போனால் கூட நமக்கு உற்ற துணைவனாக இருப்பது இந்த கூகுள் மேப்ஸ்தான்.

முன்பெல்லாம் டிராபிக் போலீஸிடம் கேள், ஆட்டோ டிரைவர் கிட்ட வழி கேள், கரெக்டாக சொல்வார்கள் என்பார்கள். இப்போதெல்லாம் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. கூகுள் மேப்பைப் பார்த்தே போக வேண்டிய இடத்துக்குப் போய் விடலாம். இந்த இடத்தில்தான் ஒரு சிறு குழப்பம்.

தவறான மொழியாக்கம்

தவறான மொழியாக்கம்

கூகுள் மேப்ஸ் ஆப்பில் ஒவ்வொரு மாநில மொழியிலும் ஊர்ப் பெயர்களை மொழிபெயர்த்து தருகிறது. அடடா சந்தோஷமான செய்திதானே என்று சந்தோஷப்படாதீர்கள். ஊர், தெரு, ஏரியாக்களின் பெயர் தப்புத் தப்பாக உள்ளது. காரணம் மெஷின் மொழிபெயர்ப்பால்.

லஸ்ஸா இல்லை லூஸா?

லஸ்ஸா இல்லை லூஸா?

உதாரணத்திற்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இடம் லஸ். ஆனால் கூகுள் மேப்பில் இது லூஸ் என்று காட்டுகிறது.

அத விடுங்க, இதுக்கு வாங்க

அத விடுங்க, இதுக்கு வாங்க

பிருந்தாவன் நகர் என்று ஒரு ஏரியா. இதை பிரிந்தவன் நகர் என்று காட்டுகிறது கூகுள் மேப்ஸ் ஆப். ஏன் பிரிந்தான், எப்படா பிரிந்தான் என்று கேட்க மாட்டார்களா மக்கள்.

மதுரைப் பக்கம் அதுக்கும் மேல பாஸு

மதுரைப் பக்கம் அதுக்கும் மேல பாஸு

சரி மதுரைக்குப் போய் பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தால் பைக்காரா என்ற இடத்தை பிய்க்கற என்று பிரித்து மேய்ந்துள்ளனர். எதய்யா பிய்க்கிற என்று சந்தேகம்தான் வருகிறது.

கோவை ரொம்பக் கொடூரம்ணா

கோவை ரொம்பக் கொடூரம்ணா

கோவைக்குப் போகலாம் என்று பார்த்தால் அது கொடூரமா இருக்கு. ராதிகா அவனுக்கே, அருண் அவனுக்கே, மஹாராணி அவனுக்கே என்று பாகம் பிரித்து வைத்துள்ளனர். அதாவது அவனுக்கே என்பதை அவென்யூ என்று கொள்க!

கொம்முனிட்டி!

கொம்முனிட்டி!

இந்தப் படத்தில் உள்ள இடத்தின் பெயரைப் பாருங்க.. உங்க வாயிலே வேற மாதிரிதானே வருது. கிட்டத்தட்ட அதே மீனிங்கில்தான் இந்த மொழிபெயர்ப்பும் இருக்கு.

இது மரண மாஸ்!

இது மரண மாஸ்!

இந்த மொழியாக்கத்தைப் பாருங்க.. மரணத்தைப் புரியல.. அதாவது மயானம் என்று சுருக்கமாக சொல்ல வேண்டியதை கூகுள் டிரான்ஸ்லேஷன் ஆப் இப்படி குத்திக் குதறித் துப்பியிருக்கு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Wrong Translation in Google Maps has been noted in the app and the site. People have urged the Giant to correct the mistakes.
Please Wait while comments are loading...