குண்டர்களின் தொடர் அச்சுறுத்தல்.. துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோருகிறார் மதுசூதனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குண்டர்களின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை இயக்குநரை சந்தித்து மதுசூதனன் இன்று மனு அளத்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட மோதலுக்குப்பிறகு அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதியில் ஓபிஎஸ் கோஷ்டி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார்.

Madhusoothanan threatens seeking armed police security

அப்போதே அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர் எஸ். ராஜேஷ் ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குண்டர்களின் தொடர் அச்சுறுத்தலின் விளைவாக இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் இன்று காவல்துறை இயக்குநரை சந்தித்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS team Madhusoothanan getting threatens from strangers. Madhusoothanan seeking armed police security.
Please Wait while comments are loading...