For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என தொடர்ந்த வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லாது என தொடப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேலின் (79,974) வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி அதே தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பெருந்தலைவர் மக்கள் கட்சின் தலைவர் என்.ஆர்.தனபாலன் (79,455) தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

Madras High Court issues notice to Election Commission

இதில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்தும் 519 வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை சொல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கு குறித்து தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் , அதிமுக வேட்பாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சௌந்தரபாண்டியனில் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் விஜயமூர்த்தி தொடர்ந்த வழக்கும், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மா.சுப்பிரமணியனின் வெற்றியை ரத்து செய்ய கோரிய சுயேட்சை வேட்பாளர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கும் நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இரண்டு வழக்கிலும் தேர்தல் ஆணையம், பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
The notice was issued on two petitions challenging election of DMK and AINRC candidates from their respective assembly constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X