கேன்சர் ஒரு கர்மா என்ற பாபா ராம்தேவிற்கு மரியாதை.. மெட்ராஸ் ஐஐடி மாநாட்டிற்கு அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யோகா குரு பாபா ராமதேவ் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விஷயத்திற்காகச் சர்ச்சையில் சிக்குவார். மருத்துவம் குறித்து தவறுதலாகப் பேசி பிரச்சனை உருவாக்கி இருக்கிறது.

அதேபோல் இவரின் நிறுவனமான பதஞ்சலியும் பல முறை விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் விற்பனை ஆகும் பொருட்களின் பதஞ்சலி தற்போது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாடு ஒன்றிற்குப் பாபா ராம் தேவ் அழைக்கப்பட்டு இருக்கிறார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

கேன்சர் எப்படி உருவாகிறது

கேன்சர் எப்படி உருவாகிறது

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாபா ராமதேவ் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது ''கேன்சர் என்பது முன்ஜென்மத்தில் செய்த தீமையால் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் நீங்கள் அதிக தவறு செய்தாலும் கேன்சர் ஏற்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

பதஞ்சலி

பதஞ்சலி

மேலும் ''பதஞ்சலி மருந்துகள் பல கேன்சரை குணப்படுத்தி இருக்கிறது. இதற்கு நவீன மருத்துவம் தேவையில்லை'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா உட்படப் பலர் ஆதரவாகப் பேசி இருந்தார்கள்.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

இந்தப் பேச்சுக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். மருத்துவர்கள் பலர் இவரை மன்னிப்பு கேட்க சொல்லி இருந்தார்கள். ஆனால் அதன்பின் இந்தப் பிரச்சனை அப்படியே மறைக்கப்பட்டது.

ஐஐடி

ஐஐடி

தற்போது மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாடு ஒன்றிற்குப் பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டு இருக்கிறார். இது கேன்சர் விழிப்புணர்வு மற்றும் தீர்வு குறித்த உலக மாநாடு என்பதுதான் முக்கியமான விஷயம். இந்த மாநாடு நாளைக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras IIT invites Baba Ramdev for conference on Cancer. It makes huge controversy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற