எய்ம்ஸை யார் கொண்டு வந்தா என்ன.. மதுரைக்கு மகிழ்ச்சிதான்... செல்லூர் ராஜுக்கும்தான்!
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசுதான் காரணம் என செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு முழுக்க முழுக்க காரணம் மத்திய பாஜகதான் என்று தமிழிசை சவுந்தராஜன் நேற்றைய தினம் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது பற்றி பிற கட்சிகள் 1% கூட உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழிசை அப்போது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, விளாச்சேரியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் 148-வது விழா பங்கேற்க வந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், ஊர் கூடி தேர் இழுத்ததால்தான் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளதாகவும், இதனை யார் கொண்டு வந்தாலும், அதனை மதுரைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சிதான் என்றார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுவதால், எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதில் எந்த தவறுமில்லை என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு அதற்காக பிரதமர் மோடிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பா.ஜ.க. மட்டுமே இதனை கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் என்றும், இதில் தமிழக முதல்வருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு என்றார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications