For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி என கூறி திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா கணவராகப் போகும் ராமசாமி: சத்யபிரியா கண்ணீர்

நீதிபதி என கூறி தம்மை திருமணம் செய்தார் என சசிகலா புஷ்பாவுக்கு 2-வது கணவராகப் போகும் ராமசாமி மீது புகார் கூறப்பட்டுள்ளது.

By Prabha
Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா புஷ்பா கணவராகப் போகும் ராமசாமி மனைவி சத்யபிரியா கண்ணீர்- வீடியோ

    மதுரை: தம்மை நீதிபதி என கூறி திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்யப் போவதாக கூறப்படும் வக்கீல் ராமசாமி என கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சத்யபிரியா கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார்.

    அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    சசிகலா புஷ்பா மவுனம்

    சசிகலா புஷ்பா மவுனம்

    ஆனால் சசிகலா புஷ்பா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இன்று சத்யபிரியா என்ற பெண் கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    நீதிபதி என பொய்சொல்லி திருமணம்

    நீதிபதி என பொய்சொல்லி திருமணம்

    அம்மனுவில், தமக்கும் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் ராமசாமிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னை நீதிபதி என கூறி திருமணம் செய்தார் ராமசாமி.

    செல்போனில் தொடர்பு

    செல்போனில் தொடர்பு

    நாங்கள் இருவரும் ஓராண்டுதான் வாழ்ந்தோம். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இருந்தபோதும் என்னிடம் செல்போனில் ராமசாமி பேசி வந்தார்.

    சசிகலா புஷ்பா எம்பியுடன் திருமணம்

    சசிகலா புஷ்பா எம்பியுடன் திருமணம்

    இந்நிலையில்தான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டுகிறேன். என் கணவர் ராமசாமியுடன் வாழ விரும்புகிறேன். இவ்வாறு சத்யபிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    AIADMK Expelled Rajya Sabha MP Sasikala Pushpa's engaged husband Ramaswamy's wife Sathya Priya complaints with her girl child in Madurai collector office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X