For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மாநகரும் மகத்தான அரசியல் சரித்திரங்களும்... காந்தி முதல் கமல்ஹாசன் வரை!

மதுரை மாநகரில்தான் மகத்தான அரசியல் சரித்திரங்கள் அரங்கேறியிருக்கின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியை சந்தித்த பிறகு கமல் கொடுத்த அதிரடி பேட்டி-வீடியோ

    மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அரசியல் சரித்திரங்களை அரங்கேற்றும் பூமியாகவும் காலந்தோறும் தொடர்ந்து வருகிறது.

    மதுரையில் கமல்ஹாசன் 21-ந் தேதி முதல் அரசியல் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை நியமித்தும் அறிவிப்பு வெளியிடுகிறார்.

    கமல் போஸ்டர்களால் அதகளம்

    கமல் போஸ்டர்களால் அதகளம்

    மதுரையில் திரும்பிய திசையெங்கும் கமல்ஹாசனின் போஸ்டர்கள்தான் களைகட்டுகின்றன. அரசியல் சரித்திரத்தின் பக்கங்களில் பார்த்தால் மதுரைக்கு எப்போதுமே பிரதான இடம் உண்டு.

    அரையாடை அணிந்த காந்தி

    அரையாடை அணிந்த காந்தி

    இந்த மதுரை மண்ணில்தான் மகாத்மா காந்தி அரையாடையை அணியத் தொடங்கினார். அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் முதன் முதலாக இடைத் தேர்தலை எதிர்கொண்டு வென்றது அப்போதைய மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் லோக்சபா தொகுதிதான்.

    அண்ணாயிசத்தை அறிவித்த மதுரை

    அண்ணாயிசத்தை அறிவித்த மதுரை

    1950களில் முதலாவது எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் இதே மாமதுரை மண்ணில்தான். 1974-ல் தமது கொள்கையே அண்ணாயிசம் என எம்ஜிஆர் அறிவித்ததும் மதுரையில்தான்.

    மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த்

    மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த்

    தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியதும் மதுரையம்பதியில்தான். இந்தி திணிப்பு எதிர்ப்பு களத்தில் மதுரை மாநகரமே போர்க்கோலம் பூண்டது. இன்றைய அரசியல் தலைவர்கள், படைப்பாளிகள் அன்று அன்னை தமிழுக்காக மதுரை வீதிகளில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததும் வரலாறு. இப்போது கமல்ஹாசனும் அரசியல் கட்சியை மதுரை மண்ணில்தான் தொடங்குகிறார்.

    English summary
    The Temple City Madurai has witnessed many political events from Gandhi to Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X