For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாடா! ஒரு வழியா தேதி குறிச்சாச்சு! வரும் 29 ஆம் தேதி மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா..

Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவடைவதையடுத்து வரும் 29-ந்தேதி மெட்ரோ ரயிலை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

chennai metro rail

முதற்கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்துபோக்குவரத்து தொடங்க அனுமதி சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

English summary
Metro rail will inaugurate by tamilnadu chief minister jayalalitha on June 29 th. All preparations are being carried by metro rail management
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X