காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை... மேட்டூர் அணை 80 அடியை எட்டியது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. ஓராண்டுக்கு பின்னர் 80 அடியை எட்டியுள்ளது அணை.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கபிணி அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது.

Mettur dam's water level touch 80 feet

காவிரியில் திறந்து விடப்படும் உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருவது அதிகரித்துள்ளது.
கடந்த 2 நாள்களில் அணையின் நீர் மட்டம் 2 அடியாக உயர்ந்துள்ளது.

ஓராண்டுக்கு பின்னர் 80 அடியை எட்டியுள்ளது அணை. வினாடிக்கு அணைக்கு 12,902 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mettur Dam's water level increases touch 80 feet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற