ஒரு வரலாற்று விசித்திரம்... 1984 எம்.ஜி.ஆரின் அக்டோபரும் 2016 ஜெயலலிதா அக்டோபரும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதமும் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதமும் ஒரே மாதிரியான அரசியல் சூழலை தமிழகம் சந்தித்திருப்பது வரலாற்று விசித்திரம்.

1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம்... அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு நாளைக்கு ரூ525 கட்டணம் வசூலிக்கப்பட்ட அறை ஒதுக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கான சிகிச்சை விவரங்களை தெரிவித்தவர் அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அதே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இருக்கும் வார்டுபக்கம் யாருக்கும் அனுமதி இல்லை. தற்போதும் அரசியல் தலைவர்களுக்கு ஜெயலலிதாவுக்கான சிகிச்சை விவரங்களை விளக்கி வருபவர் அதே சாட்சாத் பிரதாப் ரெட்டி.

மருத்துவர்களிடம் பேசியது...

மருத்துவர்களிடம் பேசியது...

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்து போது பிரதாப் ரெட்டியிடம் பேசியதாக சொல்லப்பட்ட வார்த்தை, எனக்கு மட்டும்தான் இந்த மாதிரியான சிகிச்சையா? எல்லோருக்கும் இதே மாதிரி செய்வீங்களா? என்பது. ஜெயலலிதா மருத்துவர்களிடம் பேசியதாக சொல்லப்படும் வார்த்தை "Thank You".

அன்று ஜெ... இன்று சசிகலா

அன்று ஜெ... இன்று சசிகலா

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நலக் குறைவுக்கு காரணமாக ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புக்கு அவரது தோழி சசிகலா நடராஜன் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

அப்பல்லோவில் அன்று எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அனைவரும் மருத்துவர்களிடம் சென்று நலம் விசாரித்தனர். ஆனால் அப்போது ஜெயலலிதாவுக்கு மட்டும் அப்பல்லோவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார்... அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அப்பல்லோவுக்குள் சென்று மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயராமன் மகள் தீபாவுக்கு அப்பல்லோவுக்குள் நுழைய இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

சர்ச்சை அறிக்கைகள்

சர்ச்சை அறிக்கைகள்

அந்த காலத்தில், ஜப்பான் மருத்துவர்கள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க வருவதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஆனால் கட்சியின் பொதுச்செயலராக இருந்த ப.உ. சண்முகம் இதை நிராகரிக்க சர்ச்சை வெடித்தது. இப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது... அந்த அறிக்கைகள் தொடர்பாகவும் ஏகப்பட்ட சர்ச்சை... இதனால் கடந்த ஒரு வார காலமாக எந்த ஒரு அறிக்கையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை.. இதனால் மீண்டும் சர்ச்சை.

யார் வழிநடத்துவது?

யார் வழிநடத்துவது?

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, யார் அரசாங்கத்தை வழிநடத்துவது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகையைச் சுற்றித்தான் அன்று தமிழக அரசியல் நடந்தது. பின்னர் 'முதல்வர்' அறிவுரையின் பேரில் அமைச்சரவையில் 2-வது இடத்தில் உள்ள நெடுஞ்செழியன் அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பார் என ஆளுநர் குரானா அறிவித்தார். தற்போதும் அரசாங்கத்தை நடத்தப் போவது யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர் முதல்வர் அறிவுரையின் பேரில் அமைச்சரவையில் 2-வது இடத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்திடம் முதல்வரின் துறைகள் ஒப்படைக்கப்பட்டன. 1984-ம் ஆண்டும் சரி... இப்போதும் சரி... முதல்வர் எப்படி 'அறிவுரை' வழங்கினார் என்ற கேள்வி எழுந்தது.

கட்சி உடையுமோ?

கட்சி உடையுமோ?

அக்காலத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அதிமுகவை காங்கிரஸ் கட்சி உடைத்துவிடுமோ என்ற பீதி இருந்தது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக, அதிமுகவை உடைத்துவிடுமோ என்ற பீதி உருவாகியுள்ளது.

கருணாநிதி

கருணாநிதி

அப்போதும் சரி இப்போதும் சரி திமுக தலைவர் கருணாநிதி இருவரது உடல்நிலை குறித்து கருத்துகளை தெரிவித்து வந்தார். எம்ஜிஆருடனான தமது நட்புக் காலங்களை நினைவுகூர்ந்து முரசொலியில் எழுதினார் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் அனுதாபத்தை அறுவடை செய்ய கருணாநிதி திட்டமிடுவதாக சர்ச்சை அன்று வெடித்ததும் குறிப்பிடத்தக்கத்து.

விசித்திர வரலாறுதான்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today Tamilnadu Governmental crisis caused by CM Jayalalithaa’s hospitalisation has striking resemblance to happenings 1984 October. 32 years ago Tamilnadu witnessed same political activity when the then CM MGR was hospitalised.
Please Wait while comments are loading...