பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பொது நிகழ்ச்சிகளிலும் மீடியாக்களிடமும் ஃபிரியாக வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர். அவர்களின் பேச்சு பெரும்பாலும் சர்ச்ச்சையிலேயே முடிகிறது.

குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயக்குமார் ஆகியோர் உளறுவதில் கிங்காக உள்ளனர். இவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் மரண பங்கம் செய்யப்பட்டாளும் அமைச்சர்களின் உளறல் தொடர்ந்து கொண்டே உள்ளது.

டெங்கு தடுப்பு

டெங்கு தடுப்பு

இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.

மன்மோகன் சிங் என உளறல்

மன்மோகன் சிங் என உளறல்

அண்மையில் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார்.

தவறை உணரவில்லை

தவறை உணரவில்லை

தான் தவறாக கூறியதைக்கூட உணராமல் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிடவில்லை நாங்கள் அவரை பார்க்கவேயில்லை பொய் சொன்னோம் எனக் கூறி பீதியை கிளப்பினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மரணத்திற்கு வாழ்த்து

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டிய கலைஞர் என்றும் உளறி வாங்கிக்கட்டிக்கொண்டார். இதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தை மரணம் குறித்து விசாரிக்க சென்ற அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எச் ராஜாவின் தந்தை மரணத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Minister Dindigul Srinivasan has replaced Prime Minister Modi as the Manmohan Singh. Minister Dindugul Srinivasan blabering frequently in the political stages.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X