தடை விதிச்சா ஏன் போறீங்க? ஐபிஎல் பார்க்காட்டி என்ன தலையா வெடிச்சிடும்? - ஜெயக்குமார் அதிரடி கேள்வி
ஐபிஎல் போட்டிகளை காணாவிட்டால் என்ன தலையா வெடித்துவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல்வேறு தடைகளை தமிழக கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணாவிட்டால் என்ன தலையா வெடித்து விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என்று அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
வீரர்களும், ரசிகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் யோசனை தெரிவித்தார். இந்நிலையில் தமிழக கிரிக்கெட் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்டர் பாட்டிலுக்கும் தடை
அந்த அறிக்கையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் செல்போன், பதாகைகள், பேனர்கள், கொடிகள், தண்ணீர் பாட்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரக் கூடாது. மைதானத்தில் எதையாவது தூக்கி அடித்தால் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது.

அமைச்சர் ஜெயக்குமார்
இதுகுறித்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இத்தனை தடை விதித்துள்ள நிலையில் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண நேரில் செல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். கிரிக்கெட் சங்கத்தின் தடை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்திய கிரிக்கெட் வாரியம்
அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது மாநில அரசு அல்ல, இந்திய கிரிக்கெட் வாரியம். ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றால் அது வெற்றியடைந்ததா என்பதை பார்வையாளர்கள்தான் தீர்மானிக்கின்றனர். நான் இளைஞர்களிடம் பல முறை கூறிவிட்டேன். காவிரி விவகாரம் நடைபெற்று வரும் சூழலில் அவர்கள் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

வெளிப்படையாக எப்படி கூறுவது
இளைஞர்கள் கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதை புறக்கணித்தால் அதை விட நல்ல விஷயம் வேறு கிடையாது. இதைவிட எப்படி வெளிப்படையாக கூற முடியும். இவ்வளவு சொல்லியும் போட்டியை காண இவர்கள் சென்றால் நான் என்ன செய்ய முடியும்.

மண்டை வெடிச்சிடுமா
கிரிக்கெட் போட்டிகளை காண செல்லும் ரசிகர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை காண ஏன் செல்கிறீர்கள். அவ்வளவு அவசியமா என்ன. போட்டியை பார்க்கவில்லை என்றால் தலையா வெடிச்சிடும் என்றார் ஜெயக்குமார்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications