போடா பொறம்போக்குன்னு திட்டிட்டு விளக்கம் சொன்னா குருமூர்த்திக்கு கோபம் வராதா?- ஜெயக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குருமூர்த்தி ட்வீட்டும் அதற்கு ஜெயக்குமார் பதிலடியும் தொடர்கதையாகி வருகிறது. இம்பொடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் சொல்ல, அதற்கு பதிலடியாக புறம்போக்கு என்பதற்கு விளக்கம் சொல்லியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புறம்போக்கு என்றால் ஆங்கில அகராதியில்,
Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable என்று போட்டுள்ளது.

Minister Jayakumar explain wasteland

தமிழில் சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம் என்று போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன.

உங்களை யாரையாவது புறம்போக்கு என்று திட்டி விட்டு இப்படி விளக்கம் சொன்னால் சும்மா விடுவீர்களா? அப்படி இருக்கிறது குருமூர்த்தி தனது ட்விட்டருக்கு அளித்துள்ள விளக்கம் என்று சொல்லியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar explain purampokku, is the meaning of land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable. Tamil Nadu minister D Jayakumar has warned Auditor S Gurumurthy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற