குருமூர்த்தி அவதூறாக பேசி இருந்தால் நடவடிக்கை... எரிமலையாக வெடிக்கும் ஜெயக்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை- ஜெயக்குமார்- வீடியோ

  சென்னை : முதல்வர், துணை முதல்வர் குறித்து குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பதில் அவதூறு கருத்து இருந்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சொன்னதில் அவதூறு கருத்து இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து மிகக்கடுமையான விமர்சனத்தை துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பதிவிட்டுள்ளார். குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தொலைக்காட்சிகளுக்குத் தனித்தனியே பேட்டியளித்தார்.

  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், டுவிட்டர் என்பதை நல்ல கருத்துக்காக பயன்படுத்த வேண்டும். மாண்புமிக்கவர்கள், கற்றறிந்தவர்கள் செய்கின்றன வேலையும் அது தான். டுவிட்டரில் இது போன்று கொச்சைபடுத்துகின்றன, இகழ்ச்சியை ஏற்படுத்துகின்றன வேலைகளை செய்யக் கூடாது. சொல்லப்போனால் புறம்போக்குகள் செய்கின்ற வேலையை இதில் செய்யக் கூடாது. புறம்போக்குகள் தான் அந்த வேலையை செய்வார்கள்.

  நடவடிக்கை எடுக்கப்படும்

  நடவடிக்கை எடுக்கப்படும்

  டுவிட்டர் என்பது எல்லோரும் படிக்கக் கூடியது அதில் விஷயங்களாக இருந்தால் தான் எல்லோருக்கும் அழகு. "யாகாவராயினும் நாகாக்க" என்பதே அழகு. இதில் நிச்சயமாக அவதூறான கருத்துகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை, இது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.

  இப்படியா பேசுவாரு?

  இப்படியா பேசுவாரு?

  இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது குருமூர்த்தியை ஜெயக்குமார் வசைபாடினார்.
  பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொள்பவர் இப்படி ஒரு வார்த்தையை பிரயோகிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

  குருமூர்த்தி ஆண்மை இல்லாதவராக இருக்கலாம்

  குருமூர்த்தி ஆண்மை இல்லாதவராக இருக்கலாம்

  குருமூர்த்தி வேண்டுமானால் ஆண்மை இல்லாதவராக இருக்கலாம். ஆனால் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை ஆண்மைத் தன்மையோடு கட்டி காத்து வருகிறோம்.

  ஜெயக்குமார் பதிலடி

  சொல்லப்போனால் காங்கேயம் காளை போல அதிமுகவை ஒன்றரை கோடி பேரும், நிர்வாகிகளும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குருமூர்த்தியின் குற்றச்சாட்டிற்கு ஜெயக்குமார் பதிலளித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN Minister Jayakumar says if Gurumurthy used derogatory words then definitely government will consider to take action against him

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற