பேச்சுவார்த்தை நடத்த ரெடியா இருக்கோம்... எப்ப வேண்டுமானாலும் பேசுவோம்.. அமைச்சர் ஜெயக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமைச்ச்ர ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்தக்கப்பலில் அதிகார போட்டியால் பிரிந்த அதிமுகவின் இருகோஷ்டிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Minister Jayakumar says that we are ready to talk with OPS team

இந்நிலையில் சசிகலா கோஷ்டியை சேர்ந்த அமைச்சர் ஜெயகுமார் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்து வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது கப்பலில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூறிய அவர், பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார். சட்டசபை நிதிநிலைக் கூட்டத்தொடரின் போது ஓபிஎஸ் ஆஸ்கர் நாயகன் என்றும் சிறந்த நடிகர் என்றும் கூறியவர் ஜெயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar says that we are ready to talk with OPS team. we will talk at any time he said.
Please Wait while comments are loading...