For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராயபுரம் "புலிக்குட்டி"யும்.. ஜப்பான் சிங்கக்குட்டியும். வைரலாகும் புகைப்படம்!

சிங்கக்குட்டியுடன் எடுத்து கொண்ட போட்டோவை ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிங்க குட்டிக்கு கவிதை எழுதிய அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை: சமூகவலைதளங்களில் இப்போது வைரலாகி வருவது என்ன தெரியுமா? அமைச்சர் ஜெயக்குமார் ஒரு சிங்கக்குட்டியுடன் எடுத்து கொண்ட போட்டோவும், அது பற்றி ஜெயக்குமாரே எழுதிய குறும்பு கவிதையும்தான்.,

    ஜப்பானின் பியூஜி நகரில் 20-வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

    Minister Jayakumar visits Japan and holds lion cub writes poem

    பின்னர், பியூஜி நகரில் ஒரு உயிரியல் பூங்கா இருக்கிறது. அதன் பெயர் சஃபாரி பார்க். அங்கு சென்றிருந்த ஜெயக்குமார், ஒரு சிங்கக்குட்டியை தூக்கி தன் மடியில் உட்கார வைத்து கொண்டு கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். பிறகு அந்த சிங்க குட்டியுடன் ஒரு போட்டோவும் தில்லாக எடுத்திருக்கிறார் ஜெயக்குமார்.

    அந்த போட்டோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறார். வெறுமனே போட்டோ மட்டும் இல்லை... கூடவே நச்சென்று ஒரு கவிதையையும் எழுதி பதிவிட்டுள்ளார் அமைச்சர். இதுதான் அந்த கவிதை:

    "வீரம் மிகுந்த தமிழகத்தில் இருந்து
    தீரம் மிகுந்த தமிழ் மகன்
    சிங்கம் போல வந்ததை அறிந்து,
    அழகிய சிங்கக் குட்டி ஒன்று,
    இவர் நமது தந்தையோ என நினைத்து
    தாவி என்னிடம் வந்து அமர்ந்து கொண்டது" என்று அந்த கவிதை உள்ளது.

    இந்த கவிதையும், சிங்கக்குட்டி போட்டோவும்தான் இப்போது வைரலாகி வருகிறது!

    English summary
    Minister Jayakumar visits Japan and holds lion cub writes poem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X