சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசுவது சரியல்ல.. தினகரனுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாநாயகரை மிரட்டும் வகையில் தினகரன் பேசுவது சரியல்ல என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து சபாநாயகருக்கு தினகரன் மிரட்டல் விடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

Minister Jayakumar warns TTV Dinakaran for threatening Speaker

ச1பாநாயகரை சும்மாவிட்மாட்டேன். தக்க பாடம் புகட்டுவேன் என தினகரன் பேட்டியளிக்கிறார் என்ற அவர், இது அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியுள்ளது என்றார். சபாநாயகரை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியையும் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் தற்போதைய ஆட்சியை ஊழலாட்சி என கூறும் ஸ்டாலினுக்கும் ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார்.

பூச்சிக்கொல்லி மருந்தில் ஊழல் செய்தது, 2ஜி அலைக்கற்றை ஊழல் என நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய விஞ்ஞான ஊழலை செய்தது திமுகதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar warns TTV Dinakaran for threatening Speaker. Threatening speaker is danger for democracy Jayakumar said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற