For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்குவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் செலவு - அமைச்சர் செல்லூர் ராஜூ: வீடியோ

டெங்குக் காய்ச்சலை தடுக்க கிருமி நாசினிக்கு மட்டும் 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிக்காக அரசு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ , பண்டைய தமிழகத்தில் கிராமங்கள் எல்லாம் தூய்மையாக இருந்தது. ஆனால் இன்று நம் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. அதனால் நிறைய குப்பைகள் சேருகின்றன.

Minister Sellur Raju explained the steps taken to control Dengue

அவற்றை ஒழிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறோம். அதற்காக குப்பைகளைக் கொட்டுவதற்கென கூடைகள் வழங்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் கிருமி நாசினிக்கென 16 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் செயலர் ராதா கிருஷ்ணனும் 24 மணி நேரமும் செயல்பட்டு டெங்குக் காய்ச்சலை ஒழிக்க பாடுபட்டு வருகிறார்கள். மருத்துவத்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பணிபுரிந்து டெங்குவைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என அமைச்சர் கூறினார்.

ஆனால் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்றும் இன்றும் 16 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். அவர்களில் பலர் சிறுவர், சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
To control Dengue fever government allotted 16 cr. rupees told Minister Sellur Raju.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X