ஜெ. மரணம்: யாரையோ திருப்திபடுத்த ராம மோகன ராவ் பொய் சொல்கிறார்.. அமைச்சர் தங்கமணி பரபர

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தான் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது உண்மையல்ல என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த வாரம் ஆஜரானார். அப்போது, அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமமோகன ராவ், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்ததாக கூறினார். அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது காவிரி விவகாரம் தொடர்பாக 2 மணி நேரம் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

கமிஷனில் தகவல்

கமிஷனில் தகவல்

மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்

அவர் பொய் சொல்கிறார்

அவர் பொய் சொல்கிறார்

இந்நிலையில் ராம மோகன ராவின் இந்த பேச்சுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்றார்.

யாரையோ திருப்திபடுத்த

யாரையோ திருப்திபடுத்த

உயரதிகாரி பொறுப்பில் இருந்த ஒருவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். யாரையோ திருப்திபடுத்தவே உயரதிகாரியாக இருந்தவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்றும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

நடவடிக்கை எடுக்கவில்லை

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தான் ராசிபுரத்திலும் அமைச்சர் வேலுமணி வேலூரிலும் இருந்ததாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க ராம மோகன ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Thangamani refuses Rama mohana rao explanation in inquire commission. When Jayalalitha got heart attack myself and Thangamani were out of Station.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற