அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் மீண்டும் அதிரடி ரெய்டு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஒன்றரை மாத இடைவெளியில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டிருப்பதால் அமைச்சர் பதற்றத்திலும் அச்சத்திலும் உள்ளார்

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், கல்குவாரி மற்றும் அவருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் 7ஆம் தேதி ன வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள்கைப்பற்றப் பட்டன. அதையொட்டி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

 Minister Vijaya baskar's house in Pudukottai raided again

புதுக்கோடை இலுப்பையூரில் மேற்கொண்ட சோதனையை அடுத்து அவரது அண்ணன் மற்றும் அப்பாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சோதனைகளெல்லாம் முடிந்தது என அவர் ஆசுவாசப்பட ஆரம்பித்த உடனேயே மீண்டும் புதுக்கோட்டை இலுப்பையூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த முறை சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை ஒரு அறையில் போட்டுச் சென்றதாகவும் அவற்றை மீண்டும் சோதனை செய்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax department again raided in Minister Vijaya baskar's house in Pudukottai Iluppaiyur.
Please Wait while comments are loading...