நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்காததால் சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை கொக்கிரகுளத்தில் எம். ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தாதது சர்ச்சையாகி உள்ளது.

எம்.ஜி.ஆர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளையும் பற்றியும் அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழாவானது திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, தேனி மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

 Ministers avoided to give respect to MGR statue opened Karunanidhi

அடுத்தகட்டமாக இன்று நெல்லையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள பள்ளி மைதானத்தில் இந்த விழா நடந்தது.

விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நெல்லையில் நடக்கும் இந்த பெரிய விழாவில் முக்கியமான எம்ஜிஆர் சிலை கவனிக்கப்படாமல் போய் இருக்கிறது.

நெல்லை கொக்கிரகுளத்தில் இருக்கும் எம். ஜி.ஆர் சிலையை யாரும் கவனிக்கமால் உதாசீனப்படுத்தி இருக்கின்றனர். கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை 1999-ல் திமுக தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடியார் தங்கியிருந்த விடுதி அருகேதான் இச்சிலை உள்ளது. இந்த சிலைக்கு முதல்வர் எடப்பாடியார் மாலை அணிவிக்காமல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Government has celebrated MGR centenary at Thirunelveli today. In that function ministers avoided to give respect to a statue of MGR which opened by late Karunanidhi in Kokkirakulam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற