பதவியோடு திமுகவுக்கு திரும்புகிறாரா அழகிரி?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுகவின் அவசர செயற்குழுவை வரும் 14ம் தேதி கூட்டி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
மேலும், கனிமொழி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு காரணம், ஸ்டாலின் சகோதரரும், திமுகவில் முன்பு தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிதான் என கூறப்படுகிறது.

அழகிரி நீக்கம்
அழகிரியை கட்சியில் இருந்து நீக்கி கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், தந்தை-மகன் என்ற முறையில், அழகிரி, தனது தந்தையை அவ்வப்போது வந்து கோபாலபுரத்தில் நலம் விசாரித்து செல்வது வழக்கமாகத்தான் இருந்தது. தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாறன் சகோதரர்கள், அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் மாறன் சகோதரர்களுக்கு எதிராக திரும்பியவர் கருணாநிதி. ஆனால், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் ஏற்பட்டபோது, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் கருணாநிதி.

அழகிரி தேவை
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர அழகிரி திமுகவில் இல்லாதது ஒரு காரணம் என்று அக்கட்சி பிரமுகர்களில் ஒருசாரார் நினைக்கிறார்கள். இப்போது கருணாநிதி மறைந்துள்ளதால் கட்சிக்கு வலுவூட்ட மீண்டும் அழகிரியை கட்சிக்குள் அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளுக்குள் எழுந்துள்ளது.

பெரிய பதவி
தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை தர ஸ்டாலின் தரப்பு தயாராக உள்ளதாகவும், ஆனால், மாநில அளவிலான பதவியை அழகிரி கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி பதவி தந்தால் அனைத்து நிர்வாகிகளையும் கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதைத்தான் அவர் விரும்புகிறார். அப்படி பதவி தந்தால், இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் திமுக வெற்றிபெறச் செய்ய வியூகம் வகுக்க தயாராக உள்ளதாக அழகிரி தரப்பு கூறியதாக தெரிகிறது.

தீவிர ஆலோசனை
அழகிரிக்கு மாநில அளவிலான பதவி கிடைத்தால், தங்கள் நிலை என்ன ஆகும் என்ற அச்சம் திமுகவின் சீனியர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நீடிக்கிறதாம். ஆனால் அழகிரியை திமுகவுடன் வைத்துக்கொள்ளாவிட்டால், பாஜக தலைவர்கள் மற்றும், ரஜினிகாந்த் போன்றோரின் நட்பு அவரை வழிநடத்த வாய்ப்பு ஏற்பட்டுத்திவிடும் என்று ஸ்டாலினுக்கு சிலர் எச்சரிக்கைவிடுத்துள்ளனராம். இதுகுறித்து இன்று ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. 14ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications