ஆஸம்.. தினகரனுக்கு மு.க.அழகிரி பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை தேர்தலில் ஜெயிக்காது- வீடியோ

  சென்னை: ஆர்.கே.நகரில் தினகரன் சிறப்பாக களப்பணியாற்றியதாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி பாராட்டியுள்ளார்.

  செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் திமுக தோல்விக்கு, அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் களப்பணியாற்றாதது காரணம் என்றார். வெறுமனே, வேனில் நின்று வாக்கு கேட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார் அவர்.

  அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என நம்பிக்கொண்டே காலம் தள்ள முடியாது என்பதை குறிப்பிட்டார் அவர்.

  ஆட்சி மாற்றங்கள்

  ஆட்சி மாற்றங்கள்

  பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சி வந்துள்ளதையும், டெல்லியில் கெஜ்ரிவால் புது சக்தியாக உருவானதையும், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானதையும் சுட்டிக் காட்டி, கால மாற்றத்தை கணிக்க முடியாது என வார்னிங் செய்தார்.

  அழகிரி பாராட்டு

  அழகிரி பாராட்டு

  மேலும், தினகரன் ஆர்.கே.நகரில் சிறப்பாக களப் பணியாற்றியதால்தான் வெற்றி பெற முடிந்துள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார். இதற்கான காரணங்களையும் அவர் கூறினார்.

  புது சின்னம்

  புது சின்னம்

  புதிதாக ஒரு சின்னம் தினகரனுக்கு கொடுக்கப்பட்டது. அந்த குக்கர் சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி அதில் வெற்றி பெற்றுள்ளார் தினகரன். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 33வது இடத்தில்தான் குக்கர் சின்னம் இடம்பெற்றிருந்தது.

  தேடிப்பிடித்து ஓட்டு

  தேடிப்பிடித்து ஓட்டு

  வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேலே இருந்த உதயசூரியன், இரட்டை இலை, தாமரை உள்ளிட்ட சின்னங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு வாக்காளர்கள் தேடி பிடித்து குக்கர் சின்னத்தில் வாக்களித்துள்ளார்கள் என்றால் தினகரனின் களப்பணி சிறப்பாக இருந்துள்ளது என்றுதானே அர்த்தம். இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  MK Azhagiri, former Union Minister and son of DMK leader Karunanidhi, praised Dinakaran for his better work in RK Nagar. A new symbol was given to Dinakaran but he has popularized it, and won the election with the new cooker symbol, he added.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X