For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்; இவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சரியே என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்தார்.

MK Stalin welcomes SC Verdict

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வாராய் ஆகியோர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். அத்துடன் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சொத்து குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகாலம் கழித்து தற்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல பாடமாக இருக்கும்.

தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில் இனி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

English summary
DMK working president M.K. Stalin said that the Supreme Court Verdict against Sasikala was historical judgment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X