விரைந்து உடல் நலம் பெற்று முன்பு போல பணியாற்ற வேண்டும்.. விஜயகாந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

விஜயகாந்த் முழுமையான அளவில் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தாலும் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதோடு பொதுவாழ்வு பணியினை முன்பு போல விஜயகாந்த் தொடர வேண்டும் எனவும் ஸ்டாலின் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் சிகிச்சை

வெளிநாட்டில் சிகிச்சை

சிறிது காலமாகவே விஜயகாந்த்துக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து வருகிறது. இதற்காகவே சிகிச்சை எடுத்து கொள்ள அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் வருகிறார்.

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீடு திரும்பினார்

வீடு திரும்பினார்

பிறகு உடல்நிலையில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட விஜயகாந்த், உடல்நலம் முன்னேறி இருப்பதை அடுத்து இன்று தனது வீட்டுக்கு திரும்பினார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் வீடு திரும்பியிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புல கலந்த வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+