For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வங்கிக் கணக்குல ரூ 15 லட்சம் போடறேன்னு மோடி எப்போ சொன்னார்?'- ஒரே போடாகப் போட்ட தமிழிசை!!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக மோடி எப்போதும் சொல்லவில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வங்கிகணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக மோடி வாக்குறுதி தந்தார். ஆனால் பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மக்களிடம் இருந்ததையும் பிடுங்கிவிட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Modi never promise Rs 15 lakh for each citizen, says Tamilisai

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பா.ஜ. தலைவர் தமிழசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவை குறிப்பிட்டு, வெளிநாட்டில் கறுப்பு பணம், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்றுதான் பிரதமர் மோடி கூறினார்.

இதனை திரித்து, மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். "குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu BJP President Tamilisai Soundarrajan denied MK Stalin's allegation that PM Modi failed his promise of depositing Rs 15 lakh in each citizen's account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X