For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி வனத்தில் சடலங்கள் - கோவையை சேர்ந்த ஒருவர் உடல் மீட்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

குரங்கணி வனப்பகுதியில் சடலங்கள் இருப்பதாகவும் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ

    தேனி: குரங்கணி வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 27 மீட்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சடலங்கள் இருப்பதாகவும் ஒருவர் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அவர் கோவையைச் சேர்ந்தவர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினா். இரு அணிகளாக சென்றவர்களை மீட்கும் பணியில் உள்ளூா் பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    More bodies are there, says Minister Vijayabhaskar

    இவா்களில் தற்போது வரை 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்ட அனைவரும் தேனி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

    இதில் 7 பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். குரங்கணி பகுதியில் சடலங்கள் காணப்படுவதாகவும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சா் விஜயபாஸ்கா் தொிவித்துள்ளாா். இறந்து போனவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மீட்பு பணிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா் துரிதப்படுத்தி வருகின்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    தீ பரவியதை பார்த்து பதற்றத்தில் ஓடியதில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதுரை சரக கன்சர்வேட்டர் ஆர் கே ஜெகன்யா கூறியுள்ளார்.

    English summary
    TN Health Minister Vijayabhaskar has said that there are more bodies are there in the Kurangani forest and efforts are being taken to remove them. Madurai circle conservator of forests RK Jagenia confirmed the death of four people. The cause of fire was not clearly known.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X