குடிபோதையில் பேத்தியிடம் அத்துமீறிய மகன்... வெட்டிக்கொன்ற தாய்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் சொந்த மகளிடமே அத்துமீறி நடந்த மகனைக் கண்ட தாய் அவரை அரிவாளால் சரமரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை: சொந்த மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றவரை அவரது தாயாரே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother killed her son near Sivaganga

சிவகங்கை அருகேயுள்ள புதுவயலைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து, தன் மகளுடனும் தாயாருடனும் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்த வீராச்சாமி தான் பெற்ற மகளிடமே அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். அதைப் பார்த்த வீராச்சாமியின் தாய் ஆத்திரமடைந்து அருகில் இருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுவுக்கு அடிமையான குடிநோயாளிகள் தன்னியல்பை மறந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆகவே குடிநோயளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Sivaganga, Mother killed her son, as he done sexual atrocity on his own daughter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற